தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக, பாதுகாப்பு இன்றி தனியாக இருக்கும் முதிய பெண்மணிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. சென்னையின் புளியந்தோப்பு பகுதியில் 76 வயது மூதாட்டி அல்லிராணி, தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நபரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. இதேபோல், வேளச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட 61 வயது மூதாட்டி ஒருவரை ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், திருப்பூர் மற்றும் கடலூரில் 93 வயது பாட்டிக்கு நேர்ந்த வக்கிர அத்துமீறல்களும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
வயது முதிர்வு மற்றும் உடல் பலவீனத்தைப் பயன்படுத்தி, தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மூதாட்டிகளைச் சீரழிக்கும் இத்தகைய குற்றவாளிகளின் வக்கிர புத்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பல மூதாட்டிகள் பயம் மற்றும் வயது முதிர்வின் காரணமாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூட வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கணவனை இழந்து அல்லது பிள்ளைகளின் ஆதரவு இருந்தும் பகல் நேரங்களில் தனியாக வசிக்கும் முதிய பெண்களைக் கண்காணித்து, திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் நம் சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவையே காட்டுகின்றன.
இந்த கொடூர சம்பவங்கள் தொடர்பாகத் தமிழக காவல்துறை உடனுக்குடன் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்து வந்தாலும், இத்தகைய குற்றங்கள் தொடர்வது சமூகப் பாதுகாப்பில் உள்ள தொய்வினை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. வெறும் கைது நடவடிக்கைகளோடு நின்றுவிடாமல், இத்தகைய வக்கிரக் காம மிருகங்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு மிக விரைவாகக் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டியது தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது. அப்போதுதான், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அது ஒரு அச்சமூட்டும் பாடமாக அமையும்.
இளம்பெண்களுக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுப் பாட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு தேவை என்பதை இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன. இந்த இக்கட்டான சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தற்போது தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் படை” திட்டம், ஆதரவற்ற மற்றும் தனியாக வசிக்கும் மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கும் ஒரு வலுவான அரணாக விளங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நம் தாய்மார்களைப் பாதுகாக்க, இத்திட்டத்தின் மூலம் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி, வக்கிரக் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அரசின் முன் வைக்கப்படும் முக்கியக் கோரிக்கையாகும்.
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…