காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே ஒரே முடிவு… மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்ட கே.எஸ் அழகிரி…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுகவை பொருத்தவரையில் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் திமுக எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி. உன் பேரம் பேச தேவையில்லை.

சிறந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகின்றார். காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிமுக தற்போது விளிம்பு நிலைக்குச் சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார். ஆனால் இபிஎஸ் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் எனக் கூறுகிறார். கூட்டணியை பொறுத்தவரையில் எங்களைப் போற்ற தெளிவு அவர்களிடம் கிடையாது என்று கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

8 மணத்தியாலங்கள் ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: டாஸ்மாக் கடைகள்… முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

8 மணத்தியாலங்கள் ago

வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…

8 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

8 மணத்தியாலங்கள் ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

8 மணத்தியாலங்கள் ago