நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா, தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நல்லரசாகப் புதிய தவெக அரசு விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை நோக்கிய ஒரு நல்ல மாற்றத்தைத் தந்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், பெருந்தலைவர் காமராஜரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படும் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற குறைந்த நாட்களிலேயே மக்களுக்குத் தூய்மையான நிர்வாகத்தை வழங்கி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இந்த நேர்மையான நிர்வாகத்தின் மூலம் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் கனவுகளுக்கேற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் நன்முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், காமராஜர் – மூப்பனார் வழியிலான நல்லாட்சி தமிழகத்தில் தொடரவும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக கூட்டணிக் களம் காணும் வேட்பாளர்களுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை வழங்கிப் பிரச்சாரம் செய்யும் என அந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…