பொதுவாகப் பெண்கள் வளையல் வாங்கும்போது, தங்களுக்குச் சரியான அளவு எது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படும். கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் வளையல் வாங்க நினைப்பவர்களுக்கு இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாக இருக்கும். இதற்குத் தீர்வாக, நம்மிடம் உள்ள 10 ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக வளையல் அளவைக் கண்டறியும் ஒரு சுவாரசியமான “லைஃப் ஹேக்” (Life Hack) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த முறையில், நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிது. முதலில் ஒரு 10 ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஏற்கனவே இருக்கும், உங்களுக்குச் சரியாகப் பொருந்தும் ஒரு வளையலை எடுத்து அதன் நடுவில் இந்த நாணயத்தை வைக்க வேண்டும். 10 ரூபாய் நாணயம் அந்த வளையலுக்குள் கச்சிதமாகப் பொருந்தினால், உங்கள் வளையல் அளவு 2.4 ஆகும். ஒருவேளை நாணயத்தைச் சுற்றிச் சிறிய இடைவெளி இருந்தால் அது 2.6 அளவு என்றும், இடைவெளி அதிகமாக இருந்தால் அது 2.8 அளவு என்றும் கணக்கிடலாம்.
இந்த எளிய தந்திரம் வளையல் வாங்கச் செல்லும் பெண்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வளையல் அளவீட்டு கருவி (Bangle sizer) இல்லாத நேரங்களில், கையில் இருக்கும் ஒரு நாணயத்தை வைத்தே துல்லியமான அளவைக் கண்டறிய முடியும் என்பது ஆச்சரியமான விஷயம். இனி ஆன்லைனில் வளையல்கள் ஆர்டர் செய்யும்போது அளவு மாறுபடுமோ என்ற கவலைத் தேவையில்லை எனப் பெண்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…