உத்தரப்பிரதேசம் மாநிலம் பிளி மாவட்டம் அமரியா பகுதியில், திங்கள்கிழமை இரவு ராம்லீலா கமிட்டி கூட்டத்தின் போது குப்தா வணிகர்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பழைய கணக்குத் தகராறு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, லைசென்சிங் துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளால் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த அங்கித் குப்தா மற்றும் 15 வயது சிறுவன் குணால் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அங்கித்தின் சகோதரரான மோகித் குப்தாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எஸ்பி சு்கீர்த்தி மாதவ் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று முக்கியக் குற்றவாளியான கௌசல் குப்தா உள்ளிட்ட பலரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…