பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக ‘கலாச்சார காவலர்கள்’ என்ற பெயரில் பொது இடங்களில் ஜோடியாகச் செல்பவர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், அத்துமீறுவதும் தொடர்கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஜமுய் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற மைனர் சிறுமி மற்றும் அவரது நண்பரை மறித்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைது செய்ததோடு தப்பியோடிய மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஜமுய் சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, பீகாரில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங்பூர் கிராமத்தின் அருகே, மைனர் சிறுமி ஒருவரிடம் சில இளைஞர்கள் ஈவுஇரக்கமின்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கலாச்சாரத்தைக் காப்பதாகக் கூறிக்கொண்டு பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற அத்துமீறல்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் தொடர்பாகவும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. வைரலான வீடியோவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியிடம் அத்துமீறிய குற்றத்திற்காக நான்கு இளைஞர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் காவல் துறையினர் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…