மத்திய அரசின் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் பட்டதாரிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 3,477 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஸ்டேஷன் மாஸ்டர், சீஃப் கமர்ஷியல் டிக்கெட் சூப்பர்வைசர், கூட்ஸ் டிரெய்ன் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் டைபிஸ்ட், சீனியர் கிளார்க் டைபிஸ்ட் மற்றும் டிராஃபிக் அசிஸ்டென்ட் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் முடித்த 18 முதல் 33 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளுக்கு அக்டோபர் 08, 2026 முதல் நவம்பர் 06, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் இதர சிறப்புப் பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும்; முதல் கட்ட கணினி வழித் தேர்வை எழுதிய பிறகு முழுத் தொகையும் திருப்பியளிக்கப்படும். இதர பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுத் தேர்வு எழுதிய பின் ரூ.400 திருப்பித் தரப்படும். இரண்டு கட்ட கணினி வழித் தேர்வுகள், டைப்பிங் ஸ்கில் டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. புதிதாகக்…
கஜ்வெல் காவல் நிலையத்திற்குத் தன் புகாரைத் தெரிவிக்கச் சென்ற இளம் விவசாயி பீமாரி ரவி என்பவர் மீது, அங்கிருந்த காவல்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெகவின் தற்காலிக வெற்றியால்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், திருவிழா ஒன்றில் பொதுமக்களுடன் சேர்ந்து 'கிராவிட்டிரான்' எனப்படும் வேகமான சுழலும்…
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில்,…