Categories: சினிமா

என்னை வைத்து படம் பண்ண மாட்டேன்னு சொன்னாரு… சுந்தர் C பண்ணின வேலை இதுதான்… ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த்…

Spread the love

ஸ்ரீகாந்த் தென்னிந்தியாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் திரைப்படங்களிலும் நாடித்தவர் ஸ்ரீகாந்த். தெலுங்கு சினிமாவில் இவரை ஸ்ரீராம் என்று அழைக்கின்றனர். 2000களின் ஆரம்பத்தில் புகழின் உச்சியில் இருந்தார் ஸ்ரீகாந்த்.

2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அதே ஆண்டு சினேகாவுடன் இவர் இணைந்து நடித்த ஏப்ரல் மாதத்தில் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

பின்னர் 2003 ஆம் ஆண்டு மனசெல்லாம் பார்த்திபன் கனவு ஜூட் என தொடர்ந்து பிஸியாக பல வெற்றி படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீகாந்த். தொடர்ந்து வர்ணஜாலம் கனா கண்டேன் ஒரு நாள் ஒரு கனவு மெர்குரி பூக்கள் பூ ஆகிய படங்களில் நடித்தார். 2008 வரை முன்னணி நடிகர் அந்தஸ்து பெரும் அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் ஸ்ரீகாந்த்.

ஆனால் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. அதற்குப் பிறகு இரண்டாம் நாயகன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த். அதன்படி தமிழில் நண்பன் அதுபோல மலையாளம் தெலுங்கு என இரண்டாம் நாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.

இந்நிலையில் தற்போது ஒரு நேர்காலில் கலந்து கொண்ட ஸ்ரீகாந்த் சுந்தர் சி தன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சொன்னதாக கூறியிருக்கிறார் அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். ஸ்ரீகாந்த் கூறியது என்னவென்றால், ஒருமுறை சுந்தர் சி என்னிடம் படத்திற்காக பேச வேண்டும் என்று வந்திருக்கிறார். அப்போது என் சொந்தக்காரர் தான் எனக்காக மேனேஜராக இருந்தார். அவர் சுந்தர் சி இடம் என்னிடம் கதை சொல்லுங்க அதுக்கு அப்புறம் ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிக்லாம் அப்படின்னு ஏதோ பேசி இருக்காங்க. அது அவருக்கு கோபத்தை வரவச்சுருச்சு.

ஒரு இயக்குனர் நடிகரை தவிர மேனேஜருக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னு அவருக்கு கோவம் வந்துருச்சு. அதனாலதான் அவரு என்ன வச்சு படம் எடுக்க மாட்டேன்னு ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார் என்று ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago