#image_title
மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை கே யு மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதற்குப் பிறகு ஹிந்தியில் நடித்து பின்னர் மலையாள திரில்லர் திரைப்படமான தி கிரேட் பாதரில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகன்.
பின்னர் 2021 ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு மலையாளம் கன்னடம் இந்தி என பிசியான நடிகையாக இருந்து வந்தார் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார். இது டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருப்பதாகவும் அதனால் பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளானதாகவும் தெரிவித்திருந்தார் மாளவிகா மோகனன். அவரது நடிப்பு தங்கலான் திரைப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் தெனிந்திய சினிமாவைப் பற்றி பேசும்போது, இங்கு ஒரு படம் வெற்றி அடைந்தால் அதற்கு காரணம் ஹீரோவின் உழைப்பு திறமை என்று கூறுகிறார்கள். அதே அந்த படம் தோல்வி அடைந்து விட்டால் ஹீரோயின் சரியில்லை அவரது ராசி சரியில்லை அதனால்தான் படம் ஓடவில்லை என்று கூறுகிறார்கள். இது தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு அதிகமாக நடக்கிறது என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார் மாளவிகா மோகனன்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…