“ஐந்தே மாசத்துல எஸ்கேப்”….. திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் கூண்டோடு ராஜினாமா….. காலையிலேயே பரபரப்பு….!

Spread the love

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யப்பிரியா பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள் திடீரெனத் தமது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது ஆன்மீக அன்பர்களிடையேயும் கோயில் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாகத் திகழும் இத்திருக்கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம்தான் இக்குழுவினர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களது பதவிக்காலம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில் இத்தகைய விடைபெறல் நிகழ்ந்துள்ளது.

நேற்று திருக்கோயிலுக்குச் சென்ற அறங்காவலர் குழுத் தலைவர் சத்யப்பிரியா பாலாஜி, சுவாமி தரிசனம் செய்த கையோடு தனது ராஜினாமா கடிதத்தை கோயில் அதிகாரிகளிடம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து குழுவில் இடம் பெற்றிருந்த சண்முகசுந்தரம், ராமையா ஆகிய உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்தனர். வெளியூர் சென்றுள்ள மற்றொரு உறுப்பினரான பொம்மத்தேவனும் விரைவில் தனது விலகல் கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அறங்காவலர் குழு ஒட்டுமொத்தமாகவே தனது பொறுப்பில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் திடீர் ராஜினாமாவுக்கான தெளிவான காரணங்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அண்மைக்காலமாகப் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில முறைகேடு தொடர்பான செய்திகள் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள சூழலில், திருப்பரங்குன்றத்திலும் அறங்காவலர்கள் கூண்டோடு விலகியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அறங்காவலர்கள் அனைவரும் வரிசையாக விலகியிருப்பது பக்தர்களிடையே குழப்பத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி, திருக்கோயில் நடைமுறைகள் சீராகத் தொடர இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன்மீகப் பெரியோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

2 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

16 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

24 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

48 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

56 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

1 மணத்தியாலம் ago