விஜய் அரசுக்கு விசிக போட்ட கண்டிஷன்… பனையூர் வட்டாரத்தை அலறவிட்ட திருமா…. கூட்டணிக்குள் வெடித்த புதுப் பூசல்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இருப்பினும், ஆட்சியில் பங்கேற்ற நிலையிலும் தவெகவின் கூட்டணியில் இல்லை என விசிக அறிவித்துள்ளதும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு எனத் தெரிவித்திருப்பதும், ஆரம்பம் முதலே முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரும் தலைவலியாகவே அமைந்துள்ளன.

குறிப்பாக, அரசின் செயல்பாடுகளுடன் ஒத்துப் போகாமல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு எதிரான திசையிலேயே பயணித்து வருகின்றன. விசிக தலைவர் திருமாவளவன் அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாறி மாறிப் பேசி குழப்பமான நிலைப்பாட்டை பின்பற்றி வரும் வேளையில், அக்கட்சியின் ஆளுர் ஷா நவாஸ் “தமிழகத்தை பாஜகவே மறைமுகமாக ஆள்கிறது” எனக் காரசாரமாக விமர்சித்துள்ளார். மேலும், நீட் எதிர்ப்பு போராட்டம், ஆட்சியர் அலுவலக இடமாற்றம் மற்றும் சிப்காட் எதிர்ப்பு போன்ற விவகாரங்களில் இடதுசாரி தலைவர்களும் தவெக அரசை பொதுவெளியில் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த அனுபவமிக்க தோழமை கட்சிகளின் வழிகாட்டுதல் அரசுக்கு நன்மதிப்பைத் தரும் என முதலமைச்சர் விஜய் நம்பியிருந்த நிலையில், அவர்களின் தற்போதைய பகிரங்க விமர்சனங்கள் பனையூர் தரப்பிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மனக்கசப்புகளை நேரில் பேசித் தீர்க்காமல் பொதுவெளியில் விமர்சிப்பது தர்மசங்கடத்தை உண்டாக்குவதாக தவெக கருதுகிறது. மறுபுறம், தங்களை நடுநிலையானவர்களாகக் காட்டிக்கொள்ளவும், கட்சித் தொண்டர்களைத் தக்கவைக்கவும், கூட்டணிக்குள் உள்ள சில திமுக ஆதரவாளர்களின் அதிருப்தி காரணமாகவுமே இக்கட்சிகள் இவ்வாறு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், தவெக தற்போது 106 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இதர 14 கூட்டணி உறுப்பினர்களின் தயவை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தவெக பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 5 அல்லது 7 தொகுதிகளையும் கைப்பற்றிவிட்டால், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குடைச்சல்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, காங்கிரஸ் அல்லது சிறிய கட்சிகளின் குறைந்தபட்ச ஆதரவோடு நிலையான ஆட்சியைத் தொடர முடியும் என பனையூர் வட்டாரங்கள் கணக்கிடுகின்றன.

ஒருவேளை இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், நெருக்கடி தரும் கட்சிகளை வெளியேற்றிவிட்டு பாமகவை கூட்டணிக்குள் இணைத்து அமைச்சரவையில் வாய்ப்பளிக்கவும் தவெக தயாராகி வருகிறது. அதேவேளையில், திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தவிர்க்க விராளிமலை, கரூர், பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவை மத்தியில் உள்ள பாஜகவும் உற்றுநோக்குகிறது. நீதிமன்ற தீர்ப்பு தவெக அரசுக்கு சாதகமாக அமையுமா மற்றும் இந்த அரசியல் கணக்குகள் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

3 மணத்தியாலங்கள் ago