ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தொழிலதிபர் சைலேந்தர் சிங் பக்காவின் வீட்டில் 10 தோலா தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட நகைகளைத் திருடிய கௌரேஷ் (27) என்பவரை போலிசார் கோவாவில் உள்ள சூதாட்ட விடுதியில் வைத்து கைது செய்தனர். ஆகஸ்ட் 31 அன்று தொழிலதிபரின் மனைவி நீலு கவுர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில் திருடன் முகமூடி அணிந்திருந்த போதிலும், அவனது இடது புருவத்திற்கு மேல் இருந்த ஒரு வடுவை வைத்து காவல் துறையினர் அவனைக் கண்டறிந்தனர். இந்த அடையாளத்தை வைத்து, அவர் 2016-ல் ஜூப்ளி ஹில்ஸ் மற்றும் சமீபத்தில் மாதப்பூரில் குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளி கௌரேஷ் தான் என்பதை குற்றப்பிரிவு காவலர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போலிசார், அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றதை அறிந்தனர். தொடர்ந்து அவரது நடமாட்டத்தைக் கண்காணித்த போலிசார், அவர் கோவாவிற்குச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர். திருடிய நகைகளின் ஒரு பகுதியை விற்று கோவாவில் சூதாடிய கௌரேஷைக் கைது செய்த போலிசார், திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…