#image_title
விமல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பணங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த விமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனம் கற்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
சென்னைக்கு வந்த விமல் கூத்துப்பட்டறையில் சேர்ந்து முறையாக நடிப்பை கற்று தேர்ந்தார். விஜய் நடித்த கில்லி மற்றும் குருவி அஜித் நடித்த கிரீடம் ஆகிய திரைப்படத்தில் பின்னணியில் நண்பர்கள் கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து தோன்றி இருப்பார் விமல். அடுத்ததாக 2008 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் நடித்து நாயகனாக அறிமுகமானார் விமல்.
அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு களவாணி என்ற திரைப்படத்தில் நடித்தார் விமல். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தாது. அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து லோ பட்ஜெட் மற்றும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார் விமல்.
தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2 போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது இவர் நடிப்பில் போகும் இடம் வெகு தூரம் இல்லை என்ற திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விமல் நடித்த சார் திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விமல் தனது சினிமா பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தொடர்ந்து மூணு வருஷமா என்னை பிக் பாஸ்ல கூப்பிட்டுட்டு இருக்காங்க. என்னோட கேரக்டருக்கு செட் ஆகி 100 நாளும் இருக்கலாம். இல்லனா சண்டை போட்டு மூணு நாள்ல திரும்பியும் வந்து இருக்கலாம். ஆனால் இத்தனை வருஷம் அனுபவத்துல நல்ல கதையை கொண்ட படங்களான போகும் இடம் வெகு தூரம் இல்லை, சார் மாதிரி நல்ல அழுத்தமான படங்கள் அமையும் போது நடிப்பில தான் அதிக பிடிப்பு ஆகுதே தவிர பிக் பாஸ் அதுல எல்லாம் நமக்கு ஆர்வமே வரல என்று ஓபனாக பேசி இருக்கிறார் விமல்.
பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செல்லப்பிராணிகளை வீதிகளில் கட்டுக்கயிறு இல்லாமல் சுதந்திரமாக உலா வரவிடுவது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். குறிப்பாக,…
சீனாவின் பிரம்மாண்ட நீர்மின் திட்டத்திற்குப் பதிலடியாக அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா முன்மொழிந்துள்ள 'சியாங் மெகா அணைத் திட்டம்' (Siang Upper…
திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் நம்பிக்கைக்குரியவரும், அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளருமான ஜெயன், 35 ஆண்டுகால கட்சிப்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (IT) துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.…
இயற்கையின் சீற்றமும் அழகும் இணைந்து வெளிப்படும் ராஜஸ்தானி புயல், புழுதிப் புயல்களின் ஊடே மனித குலத்திற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துக்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். வெளிநாட்டில் பணிபுரியும் இவரது மனைவி சத்யா, தனது பிள்ளைகளுடன்…