மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரி வரைவு விதிகள் 2026, சாமானியர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 60 ஆண்டுகால பழைய சட்டங்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த மாற்றத்தின்படி, வங்கிகளில் ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய பான் (PAN) கார்டு கட்டாயம் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டு, இனி ஒரு நிதியாண்டில் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே பான் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், ஹோட்டல் மற்றும் திருமண மண்டபக் கட்டணங்களுக்கான பான் வரம்பு 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், அசையா சொத்து பரிவர்த்தனைகளுக்கான வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஊழியர்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச உணவுக்கான வரி விலக்கு ஒரு வேளைக்கு 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அலுவலக வாகனங்களுக்கான பயணப் படி சலுகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிரிப்டோ பரிவர்த்தனைகளை முறைப்படுத்த புதிய கண்காணிப்பு விதிகள் கொண்டு வரப்படுவதோடு, ரிசர்வ் வங்கியின் ‘டிஜிட்டல் ரூபாய்’ இனி அதிகாரப்பூர்வமான ரொக்கமில்லாத பரிவர்த்தனையாக அங்கீகரிக்கப்படும்.
வீட்டு வாடகை படி (HRA) கணக்கீட்டில் மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் சென்னை, மும்பை போன்ற நகரங்களுடன் பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நகரங்களில் வசிப்பவர்கள் 50% வரை அதிகப்படியான வரி விலக்கைப் பெற முடியும். இந்த புதிய வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வல்லுனர்கள் வரும் 22-ம் தேதி வரை தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது, இது டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு வரி நடைமுறைகளை எளிமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…