Categories: சினிமா

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் “7” ஆம் நம்பருக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கா?.. இதுவரை பலரும் அறியாத தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். மிகப்பெரிய வல்லமையுடன் முன்னணி ஹீரோவாக திகழ்ந்த என்று யார் ஒரு கட்டத்தில் தன் படங்களுக்கு தயாரிப்பாளர்களை கடந்து தானே முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

அப்போதுதான் படப்பிடிப்பில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி அந்த திட்டத்தையும் செயல்படுத்தி காட்டினார்.  குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக  பயன்படுத்தி  தன்  அபாரமான  நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் நிறைந்திருக்கும்.

அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை சார்ந்தவர்களும் தன்னை எதிர்ப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக உதவி செய்தவர்.

இப்படி பல புகழுக்குரிய எம்ஜிஆருக்கும் 7 என்ற நம்பருக்கும் ஒரு சுவாரஸ்யமான நெருக்கம் உள்ளது. ஜனவரி 17ஆம் தேதி 1917 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாள். 1947 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் முதல் வெற்றி படமான ராஜகுமாரி திரைப்படம் வெளியானது. அடுத்து 1967ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர், எம்ஆர் ராதாவால் சுடப்பட்டார். 1977 ஜூன் 30-ம் தேதி எம்ஜிஆர் முதல் முறையாக தமிழக முதல்வரானார். 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் உடல் நலக்குறைவால் காலமானார்.
Nanthini

Recent Posts

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

16 minutes ago

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

9 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

9 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago