அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு “உண்மையான விவசாயி” என்று ஒவ்வொரு தேர்தல் மேடையிலும் பெருமையாகப் பேசி வரும் நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுத் தாக்கல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொள்வதாகவும், ஒரு சிலரைப்போல் ஒப்புக்குச் சொல்லாமல் நெல், கரும்பு எனத் தனது தோட்டத்தில் பயிரிட்டு வருவதாகவும் அவர் கூறி வந்தார். ஆனால், எடப்பாடி தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது பெயரில் அசையா சொத்துகளோ அல்லது விவசாய நிலமோ ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்களின்படி, எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.50.86 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், அவரது மனைவி ராதாவுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரதிநிதியாகப் பச்சைத் துண்டு அணிந்து வலம் வரும் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் ஒரு சென்ட் விவசாய நிலம் கூட இல்லை. மாறாக, அவரது மனைவி ராதாவின் பெயரில் எடப்பாடி, திருச்செங்கோடு மற்றும் ஈரோடு பகுதிகளில் வேளாண் நிலங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்தப் பெயரில் நிலமே இல்லாதவர் எப்படி விவசாயி என்று சொல்லிக் கொள்ளலாம் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். “நிலமே இல்லாத விவசாயி” என்ற ஹேஷ்டேக் வைரலாகி வரும் நிலையில், “விவசாயி என்று கூறுவதெல்லாம் நடிப்பா கோபால்?” எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். “ஒருவேளை இவர் வீட்டிற்குள்ளேயே விவசாயம் செய்கிறாரோ?” என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து எடப்பாடி பழனிசாமியின் “விவசாயி” அடையாளத்தை மேடைப் பேச்சோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…