பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD படம் உருவாகி வருகிறது. இதனை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
இதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கல்கி பட கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த படத்தில் கமல் லுக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கல்கி திரைப்படத்தை வருகிற ஜனவரி மாதம் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என பட குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் நடிகர் கமல்ஹாசன் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க வில்லையாம். அவர் 20 நாள் மட்டுமே நடிக்கிறார். அடுத்தடுத்த படபிடிப்புகளில் கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் கல்கி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் கமல்ஹாசன் கல்கி படபிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 32-ல் உள்ள கீதா பவன் பகுதி சந்துகளில், கடந்த 4 நாட்களாக…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஏற்கெனவே நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து…
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், நவராத்திரி வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கடுமையான சடங்கு…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், டெல் அவிவ் நகரின் மீது அணு குண்டு…
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை…
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையேயான அண்மைய சந்திப்பு அரசியல்…