“கணவருக்கு சிகிச்சை…” ஆஸ்பத்திரியில் மூதாட்டியை சுத்தியலால் அடித்த இளம்பெண்… பதற வைக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

Spread the love

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில், 65 வயது மூதாட்டி ராணி என்பவரை ஒரு இளம் பெண் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி தனது கணவரை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது, பர்தா அணிந்து வந்த அந்தப் பெண் கழிவறையில் வைத்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தரமணியைச் சேர்ந்த நித்யா என்ற பெண்ணைக் கைது செய்தனர்.

கைதான நித்யா அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தைக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை நடப்பதால் ராணியுடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். ஒருமுறை மருத்துவ அறிக்கையை வாங்கி வர மூதாட்டி கூறியபோது நித்யா மறுத்ததால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ராணி ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நித்யா, பழிவாங்கும் நோக்கில் பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கியது அம்பலமானது. ஒரு சிறிய வாய் தகராறுக்காகத் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

1 மணத்தியாலம் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago