#image_title
முன்னணி நடிகரான விஷால் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யாவுடன் விஷால் இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படம் சூப்பர் ஹிட் ஆனது. ஹரி இயக்கத்தில் ரத்தினம் படத்தில் விஷால் நடித்து முடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். வருகிற 26-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளில் விஷால் மும்முரமாக இறங்கி விட்டார். நடிகர் விஷால் தேவி என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதன் மூலம் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று குடும்ப சூழ்நிலையால் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்டன்மதி என்ற சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் லிட்ரேச்சர் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு என்னிடம் உதவி கேட்டார். அவளை நான் படிக்க வைத்தேன். இப்போது அவர் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். ஒரு அப்பாவா என் பொண்ண நெனச்சு எனக்கு பெருமையா இருக்கு. என் பொண்ணு என் பேர காப்பாத்திட்டா. இப்ப அவர் டிகிரி வாங்கிட்டா என உருக்கமாக பேசி உள்ளார்.
மேலும் தேவி அறக்கட்டளை மூலம் உதவி தேவைப்படும் மாணவர்களை படிக்க வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இதேபோல அந்த பெண் பேசும்போது என் படிப்புக்கு தேவையான அனைத்தையும் விஷால் அண்ணா தான் செய்து கொடுத்தார். எனக்கு இங்கிலீஷ் ரொம்ப பிடிக்கும். இப்போது நான் படித்து முடித்து விட்டேன். நான் போர்ச்சுக்கல் போன போது அதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் விஷால் அண்ணா தான் செய்தார் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…