#image_title
அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிரிஷ் என்பவர் ஹீரோவாக நடித்தார். படம் நல்ல வரவேற்பு பெற்றதால் சிரிஷ் ராஜா ரங்குஸ்கி, பிளட்மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்திருக்கும் காந்தாரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சிரிஷுக்கும் சென்னை சேர்ந்த ஹஸ்னா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரபல நடிகரான சிம்பு மாஸாக என்ட்ரி கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார். தற்போது சிம்பு தனது 48-வது திரைப்பட பணிகளை கவனித்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
அந்த திரைப்பட பணிகளை பாதிலேயே நிறுத்திவிட்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தக் லைஃப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு தனது 48-வது படத்தை சிம்பு மீண்டும் தூங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மெட்ரோ பட நடிகரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்பு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.
மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிம்பு கூறியதாவது, ஒரு பையன் தான் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ண ஒரு அப்பா எப்படி மகளை பார்த்துப்பாரோ அந்த மாதிரி பாத்துக்கணும். அதே மாதிரி ஒரு பொண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கிற பையன தன் தகப்பனை எப்படி பார்ப்பாங்களோ அதே மாதிரி பாத்துக்கணும். அப்படி பார்த்தா வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். இது என்னோட அட்வைஸ் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…