“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் சினிமா இயக்குநர்கள் வரை…” நச்சு கலாச்சாரத்தால் உருவாகும் ‘சுள்ளான் மதன்’ கும்பல்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி செய்தி…!!

Spread the love

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இளம் வயது குற்றவாளிகள் மற்றும் ‘சுள்ளான் மதன்’ போன்ற ரவுடி கும்பல்களின் உருவாக்கம் குறித்துச் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் எழுப்பி வரும் கவலைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சினிமாக்களில் வன்முறையை அதிகாரத்தின் அடையாளமாகவும், எதிரிகளை அடிப்பதையும் காவல்துறையை எதிர்ப்பதையும் ‘கெத்து’ என்றும் தொடர்ந்து சித்தரிப்பதும், சமூக வலைதளங்களில் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் புகழும் இளம் தலைமுறையினரைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

திரைப்படங்களில் 90 சதவீதம் ரவுடித்தனமும், படத்தின் இறுதியில் 10 சதவீதம் மட்டுமே தண்டனையும் காட்டப்படுவதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், குற்றச்செயல்களைப் புகழுக்கான வழியாகத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ‘தேவர் மகன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘அரசன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் உள்ள ஆக்கபூர்வமான சூழல்களை விடுத்து, அதில் வரும் வன்முறைப் பாத்திரங்களை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் சிறார்கள் இன்று குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் குற்றங்களை மிகைப்படுத்திப் பரப்புவதுடன், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திச் சிறார்கள் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. எனவே, சினிமா இயக்குநர்கள் பொறுப்புடன் செயல்படுவதும், சமூக வலைதளங்களில் குற்றவாளிகளைப் பிரபலப்படுத்துவோருக்கு எதிராகக் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே இளைய சமுதாயத்தைக் காப்பாற்ற ஒரே வழியாகும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“அவனுடன் சேர்ந்து வாழ ஆசை…” கணவரை கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி… முடிவுக்கு வந்த 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…

4 minutes ago

துபாய் பறந்த உதயநிதி… உச்சநீதிமன்றக் கெடுவில் விஜய்… தவெக அரசின் முக்கியக் கூட்டத்தில்… பங்கேற்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?… பரபரக்கும் தலைமைச் செயலகம்…!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் காலியாக உள்ள மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக…

11 minutes ago

அதிர்ச்சி… தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்?… முதல்வர் விஜய் போடும் மெகா பிளான் என்ன?…

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது மீதமுள்ள…

39 minutes ago

“அந்த போஸ்டிங் உனக்கு தான்…” 2 பிள்ளைகளின் தாய்க்கு கொடுமை… கட்டாய கருக்கலைப்பு… தவெக நிர்வாகி மீது திருமணமான பெண் பரபரப்பு புகார்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணை…

41 minutes ago

“அத்தையே செய்த அசிங்கம்…” பெற்றோரை இழந்த 16 வயது சிறுமியை ஸ்பாவில் விற்ற கொடூரம்… மாமா உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது அனாதைச் சிறுமியை, அவரது பெற்றோர் மறைவுக்குப் பின் வளர்த்து வந்த சொந்த அத்தையும்…

48 minutes ago