#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ல் வெளிவந்த திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இதில் விஜய் சேதுபதி , காயத்தரி, விக்னேசுவரன், பகவதி பெருமாள், இராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நகைச்சுவையோடு எடுக்கப்பட்ட திரைப்படம். இயக்குனர் பிரேம்குமார் பல படங்களை இயக்கி வருகிறார்.
#image_title
இப்படத்தில் விஜய் சேதுபதி பெயர் பிரேம் குமார். விஜய் சேதுபதி 2 நாட்களில் தன் காதலியுடன் இரு வீட்டார் அனுமதியுடன் திருமணம் செய்வார். முன்னதாக நண்பர்களின் விருப்பப்படி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் போது கால் தவறி கீழே விழும் அவருக்கு பின் மண்டையில் அடிபட்டு தற்காலிக மறதி ஏற்படுகிறது.
#image_title
இதனையடுத்து அவர் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என்பதையும் தன்னுடைய காதலி தனலட்சுமி என்பதையும் மறந்து விடுவார். இதனால் அதிர்ச்சியடையும் அவர் நண்பர்கள் அவருக்கு மீண்டும் நினைவு திரும்ப மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வார்கள். அங்கு மருத்துவர் இவருக்கு எப்போது வேண்டுமானாலும் நினைவு திரும்பி விடும் என்று சொல்வார்.
#image_title
இதனையடுத்து பிரேம் குமாரின் திருமணம் இதனால் நின்றுவிடகூடாது என்று நினைக்கும் நண்பர்கள் பிரேம் குமாரின் பெற்றோர்க்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இந்த படத்தின் கதை இயக்குனர் பிரேம் குமார் கதை என்பது பலரும் அறியாதது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…