Categories: சினிமா

மாஸாக ரிலீசான ஜவான் திரைப்படத்தின் ‘வந்த இடம்’ பாடல்… தமிழ் பேசி மாஸ் காட்டிய  ஷாருக்கான்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

Spread the love

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜீரோ படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பதான் என்கிற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான்.

பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்கிற பெருமையையும் பதான் பெற்றுள்ளது. பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் தான் ஜவான்.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் ஜவான் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்க பிரியாமணி, யோகி பாபு சானியா ஐயப்பன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இதனால் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஜவான் மாறியுள்ளது. மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

முன்னதாக ஜவான் திரைப்படத்தின் ஜிந்தா பிந்தா முழு வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழில் “வந்த எடம்” என வந்திருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. “வந்த எடம்” பாடலுக்கு ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து ஷாருக் கான் நடனமாடியுள்ளார் . இந்த பாடலுக்கு முன்னணி நடன இயக்குனர் சோபி மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். இந்த மேக்கிங் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

17 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

26 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

27 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

32 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

39 minutes ago