திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசித்து வரும் பழனியம்மாள் என்ற மூதாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவரது பேத்தி அஷ்விதா, பாட்டியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பழனியம்மாளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பல்லடம் போலீசார், அந்த வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பழனியம்மாளின் மகன் நாகராஜ் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜைப் பிடித்துப் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
தனக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாகவும், அதனை அடைப்பதற்குத் தனது தாயிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்ததாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தாயைக் கல்லால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்த நிலையில், பெற்ற தாயையே பணத்திற்காகத் தாக்கிய மகனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…