“கையிலேயே வச்சிருந்தும் போயிருச்சே உயிர்”…. வியட்நாம் படகு விபத்தின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை…. வைரலாகும் கடைசி நிமிட திக் திக் வீடியோ….!

Spread the love

வியட்நாமின் ஃபூ குவோக் தீவுப் பகுதியில் ஏற்பட்ட கோரமான படகு விபத்தில், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் ஊழியர்களான 15 இந்தியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹான் மே ரட் நிகோய் தீவுக்கு அருகே 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 வியட்நாமிய ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த அதிவேகப் படகு (Speedboat), கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த அலைகளின் காரணமாகத் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரமான சம்பவத்தில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. படகு கவிழ்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், படகில் இருந்த பயணிகள் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உடைகளை (Life Jackets) உடலில் முறையாக அணியாமல், வெறும் கைகளில் மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அலட்சியமே பயணிகளின் உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் குறைத்து, இவ்வளவு பெரிய உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, படகு புறப்படுவதற்கு முன்பாகவே அதன் கேப்டன் பயணிகள் அனைவரையும் கட்டாயம் பாதுகாப்பு உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பயணிகள் பலர் அதை உடலில் மாட்டிப் பூட்டாமல், கைகளிலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வியட்நாம் நாட்டு அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில், ஹனோயில் உள்ள இந்தியத் தூதரகம் வியட்நாம் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளிலும், அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து உடல்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூதரக அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

4 minutes ago

இவ்வளவு வெறியா?!… “இதுக்கெல்லாமா அடிச்சுப்பாங்க?!”… நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட அண்டை வீட்டார்… பதைபதைக்கும் சிசிடிவி…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…

5 minutes ago

“திருச்சி கிழக்கில் திரிஷாவா? ஜான் ஆரோக்கியசாமியா?”…. அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட பிளான்…..!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…

9 minutes ago

சைக்கோவா இவன்!… “என் பொண்டாட்டி அங்க பேசக்கூடாது!”… நந்தி ஹில்ஸ் மர்மம்… பாசம் ஒரு குடும்பத்தையே அழிச்சிருச்சா?… மாப்ள போட்ட கொடூர ஸ்கெட்ச்…!!

பெங்களூருவில் தனது மனைவி குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பழகுவதை வெறுத்த வாடகை கார் ஓட்டுநர் இந்தூசேகர், அவரது மனைவி சுனிதா உட்பட…

12 minutes ago

“ஸ்டாலினை பார்த்து கத்துக்கோங்க”…. உதயநிதிக்கு எதிராக கொதிக்கும் திமுக சீனியர்கள்…. அதிரும் அறிவாலயம்…!

திமுக மூத்த தலைவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் இடைவெளி குறித்து பிரபல வார இதழில் வெளியான…

13 minutes ago

“ரூ.30 கோடி பேரம்… சிக்கிய ஆடியோ”…. அதிமுக நிர்வாகி மன்னன் விடிய விடிய கைதான பரபரப்பு பின்னணி…. அதிர்ச்சியில் அதிமுக….!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குதிரை பேர குற்றச்சாட்டில், அதிமுக நிர்வாகி…

21 minutes ago