இதை கவனிச்சீங்களா..? “TN 07 CM 2026′” GOAT படத்தில் காட்டிய சீக்ரெட் Code… 2026-ல் நிஜமாகப்போகும் விஜய்யின் முதல்வர் கனவு..!!

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து, திராவிட அரசியலின் கோட்டையாகத் திகழ்ந்த திமுகவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. இந்த மெகா வெற்றிக்கு முன்பே, 2024-ம் ஆண்டு வெளியான ‘தி கோட்’ (GOAT) திரைப்படத்தில் தனது அரசியல் லட்சியம் குறித்த ஒரு சூசகமான தகவலை விஜய் வெளிப்படுத்தியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படத்தில் அவர் ஓட்டிச் செல்லும் ஒரு காரின் பதிவு எண் ‘TN 07 CM 2026’ (TN – தமிழ்நாடு, CM – முதலமைச்சர், 2026 – ஆண்டு) என்று இடம்பெற்றிருப்பது, அவர் அப்போதே 2026-ல் முதலமைச்சராகும் திட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்துவதாக அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி, 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களைக் கைப்பற்றி தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வருகை ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விஜய் தான் போட்டியிட்ட திருச்சி (கிழக்கு) மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பெரம்பலூர் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டு திருச்சி (கிழக்கு) தொகுதியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியமைப்பதற்கான மேஜிக் நம்பரை எட்ட, தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் 2 இடங்களைக் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே திரைப்படத்தில் காட்டியபடி 2026-ல் விஜய் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிப்பதற்கான அனைத்துக் காய்களும் தற்போது கச்சிதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

Soundarya

Recent Posts

லாட்ஜில் பயங்கரம்…! “உன்னை சும்மா விட மாட்டோம்…”  ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது…

12 seconds ago

ஐயோ காப்பாத்துங்க..! “கண்ணெதிரே கதறிய மனைவி”… புதுமண தம்பதி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அக்கிரமம்… மாந்தோப்பில் நடந்த கொடூரம்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை…

4 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! பைக் மீது மோதிய பிக்கப் வேன்… துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

6 minutes ago

இரத்தமா ஓடுது உடம்புல?… 5 வயது பிஞ்சு குழந்தை… கர்ப்பிணி தாய்… மிருகத்தனமான வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் சிறுமியும் அவரது கர்ப்பிணித் தாயும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையையும்…

13 minutes ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…! தலைவா…! ‘ஜெயிலர் 2’ படத்திற்காக மொத்த தியேட்டரையும் புக் செய்த சஞ்சு சாம்சன்… நீங்க வேற லெவல் போங்க…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமும், கேரளாவைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார்…

14 minutes ago

அதிவேக சாகசம்… பார்வையாளர்கள் அலறல்… ஒத்திகையிலேயே இப்படி ஒரு விபத்தா?… பைக்குகள் மோதி விபத்து… மைதானத்தில் திரண்ட கூட்டம்…!!

மைசூரு தசரா விழாவை முன்னிட்டு பன்னிமண்டப மைதானத்தில் வழக்கம்போல டார்ச்லைட் அணிவகுப்பிற்கான ஒத்திகை தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது இந்திய…

19 minutes ago