தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் த.வெ.க-வில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய முடியாததால், கடந்த தேர்தலுக்கு முன்பாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார். எனினும், தி.மு.க-வில் அவருக்கும் அவரது மகனுக்கும் எதிர்பார்த்த முக்கியத்துவமோ, பொறுப்புகளோ வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் தற்பொழுது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாகவே த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கடைசி நேரத்தில் தி.மு.க கொடுத்த சபாநாயகர் பதவி மற்றும் எம்.பி சீட் ஆசைகளால் அவர்கள் தி.மு.க-விற்குச் சென்றதாகவும் த.வெ.க தரப்பில் பேசப்படுகிறது.
தற்போது த.வெ.க ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மீண்டும் கட்சி மாறினால் தனது அரசியல் நம்பகத்தன்மை கெட்டுவிடும் எனத் தயங்கும் ஓ.பி.எஸ், தனது மகனையும் ஆதரவாளர்களையும் மட்டும் த.வெ.க-விற்கு அனுப்ப ‘கிரீன் சிக்னல்’ காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, ஏற்கனவே தேனி மாவட்டத்திலிருந்து அ.தி.மு.க-வினர் பலர் த.வெ.க-வில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இப்போது ஓ.பி.எஸ் தரப்பும் உள்ளே வந்தால் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று த.வெ.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உள் கட்சிப் பூசலும், அதிருப்தியும் எழத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து மாற்றுக்கட்சியினர் த.வெ.க-வை நோக்கிப் படையெடுப்பது அக்கட்சியின் உள் கட்டமைப்புக்குள்ளேயே புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…
தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் "வருகையில்லா ஆவணப்பதிவு" எனும்…
கோவை மாணவன் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே…
பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…