Categories: HISTORY

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத ஆச்சாரங்களை ஆதரித்தும் முதலாளித்துவத்தை ஆதரித்தும் பேசுபவர்களை வலதுசாரி என்று முத்துரை குத்துவார்கள்.

தொழிலாளர் நலன், சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றை குறித்து பேசுபவர்களை இடதுசாரி என்று முத்திரை குத்துவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளும் இந்தியாவில் உருவான வார்த்தைகள் இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்த வார்த்தைகளை உருவாக்கியது.

அதற்கு முன் நாம் பிரெஞ்சு புரட்சியை குறித்து சுருக்கமாக பார்த்துவிடலாம். 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்டு வந்த பதினைந்தாம் லூயி என்ற மன்னர் மிகப் பெரும் கொடுங்கோலனாக இருந்தார். நாட்டு மக்களின் மீது எந்த கவலையும் இல்லாமல் செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே ஆட்சி நடத்தினார். இதனால் விவசாயிகளும் தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் மீது அதிக வரி வசூலிக்கப்பட்டது.

நிலப்பிரபுக்களும் மத போதகர்களும் அதிக சலுகைகளை அனுபவித்தனர். ஆனால் ஏழை எளிய மக்கள் பசியால் வாடினார். பொருட்களின் விலையும் அதிகமானதால் பஞ்சமும் தலை விரித்தாடியது. அதன் பின் பதினாறாம் லூயி மன்னர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடிக்க, 1789 ஆம் ஆண்டு மக்களிடையே புரட்சி வெடித்தது. இந்த புரட்சியால் பிரான்ஸில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

புரட்சி வெடித்த சமயத்தில் பிரான்ஸ் மன்னர் லூயிக்கு மக்களிடையே எந்தளவு அதிகாரம் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு சபை கூடியது. அதில் மன்னரின் ஆட்சியை கடவுளின் ஆட்சி போல் ஏற்றுக்கொள்ள வேண்டும், மதத்தின் பழமையான பழக்க வழக்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மன்னராட்சியையும் பழமைவாதத்தையும் ஆதரித்தவர்கள் எல்லாம் அந்த சபையின் வலது பக்கத்தில் நின்றார்கள். மன்னராட்சிக்கு இனிமேல் கட்டுபட முடியாது, இனி சுதந்திரமே குறிக்கோள் என்று முற்போக்காக யோசித்த, மன்னராட்சிக்கு எதிராக இருந்தவர்கள் அந்த சபையின் இடதுபக்கம் நின்றார்கள்.

இந்த பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் உலக மக்களிடையே சுதந்திரம் என்ற தாகம் அதிகமானது. பல நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் வெடித்தன. அவ்வாறுதான் மன்னராட்சிக்கு ஆதரவாகவும் பழமைவாதத்திற்கு ஆதரவாகவும் இருந்தவர்களை வலதுசாரிகள் என்றும், முற்போக்கு சிந்தனை உடையவர்களை இடதுசாரிகள் என்றும் வகைப்படுத்தத் தொடங்கினார்கள்.

Arun

Recent Posts

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

9 hours ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

10 hours ago

அடுத்த படத்திற்கு சிறுத்தை சிவாவுடன் இணையும் தல அஜித்.. சன் பிக்சர்ஸ் போட்டோ முக்கியமான கண்டிஷன்ஸ்.. இதுக்கு செட் ஆவாரா அஜித்..?

பிரபல நடிகரான அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படபிடிப்பு…

10 hours ago

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி…

12 hours ago

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

15 hours ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

15 hours ago