த.வெ.க-வில் இணைய திட்டமா?.. நிருபர் கேட்ட கேள்வி.. சி.வி.சண்முகத்தின் ஒற்றை பதிலால் அதிர்ந்த அரசியல் களம்..!!

Spread the love

அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளனர். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தங்களது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் இந்த அதிரடி முடிவு குறித்துக் கேட்டதற்கு, இது தொடர்பாகப் பின்னர் விரிவாகப் பதில் அளிப்பதாகக் கூறிவிட்டு அவர் காரில் ஏறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், “உங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25-லிருந்து 17 ஆகக் குறைந்துள்ளதே?” எனக் கேள்வி எழுப்பியதற்கு, “25 என்ற எண்ணிக்கை 35 ஆகக் கூட மாறலாம், அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது” என்று சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, “நீங்களும் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்று நிருபர்கள் கேட்டதால் அதிருப்தி அடைந்த அவர், “தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்” எனத் தடித்த குரலில் காட்டமாகக் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

Muthu Mani

Recent Posts

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

16 minutes ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

26 minutes ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

36 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

46 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

54 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

56 minutes ago