பகீர்..! தெருவில் விளையாடிய 10 வயது சிறுவன்… ஓங்கி தரையில் அடித்து எறிந்த மர்ம நபர்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவனை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, தூக்கி வீசிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் திடீரென அந்தச் சிறுவனைப் பிடித்து ‘சோக் ஸ்லாம்’ (Choke Slam) செய்வது போல கழுத்தைப் பிடித்து உயரே தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார். இதில் அந்தச் சிறுவன் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் விழுந்து கிடப்பதைக் காண முடிகிறது.

இந்தக் கொடூரமான தாக்குதலில் சிறுவனின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தரையில் மோதிய வேகத்தில் சிறுவனால் எழுந்திருக்கக்கூட முடியாமல் துடிப்பதைக் கண்டும், அந்த நபர் சிறிதும் இரக்கமின்றி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், ஒரு சிறுவனிடம் இவ்வளவு வன்முறையை வெளிப்படுத்திய அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, விளையாடும்போது ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“10 வருஷம்.. 3 கட்சிகள் தாவி”… நீங்கெல்லாம் எப்படி ஜெயிக்க போறீங்க… குஷ்புவை இழுத்து சுந்தர்.சிக்கு ‘செக்’ வைத்த பிரகாஷ் ராஜ்…!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…

9 minutes ago

“ஏன்டா அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளி-யே இல்லையே!”… ராகுல் சொன்னது ஒன்னு… செல்வம் சொன்னது ஒன்னு…. மேடையிலேயே அரங்கேறிய ‘லைவ்’ காமெடி…!

அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…

19 minutes ago

“250 கோடி கேட்ட சங்கீதாவை வெறும் 35 கோடியில் மடக்கிய விஜய்”… ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய நடந்து முடிந்த பஞ்சாயத்து….!

தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…

27 minutes ago

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

33 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

36 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

37 minutes ago