தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகாலமாக அவிநாசி தனித் தொகுதியில் வெற்றி பெற்ற எவருக்கும் கிடைக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதுவரை நடந்த 12 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக ஒன்பது முறையும், திமுக மூன்று முறையும் மாறி மாறி இத்தொகுதியில் களம் கண்டு வென்றபோதிலும், அங்கிருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெற்றதில்லை என்ற நீண்டகாலக் குறையை முதல்வர் விஜய் தற்போது உடைத்தெறிந்துள்ளார்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான 28 வயது இளம் பெண் கமலிக்குத் தனது அமைச்சரவையில் வாய்ப்பளித்ததன் மூலம், இந்த ஆட்சிக்காலத்தின் “மிக இளம் அமைச்சர்” என்ற பெருமையையும் அவருக்கு முதல்வர் தேடித்தந்துள்ளார். பாரம்பரியக் கட்சிகள் பல தசாப்தங்களாகச் செய்யத் தவறிய இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை, முதல்வர் விஜய் துணிச்சலுடன் செய்து காட்டியிருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கிலும் உற்றுநோக்கத்தக்க ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் பாராட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மஞ்சுநாதன் – அமிர்தலட்சுமி தம்பதியின் மூத்த மகள்…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கேற்றிருப்பது குறித்த விமர்சனங்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அந்தவா சந்திப்பு அருகே, ஞாயிற்றுக்கிழமை மதியம் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச்…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக…
விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு…