ராகுலுக்கு பறந்த ‘சீக்ரெட்’ மெசேஜ்.. ஸ்டாலின் போட்ட கண்டிஷன்… காங்கிரஸ் எம்பிக்களுக்கு ஆப்பு?… தமிழக அரசியலில் பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் உரிமை’ என்ற ரீதியில் இவர்கள் பேசி வருவது திமுக தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், கூட்டணியைக் குழப்ப நினைக்கும் இத்தகைய குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து அதிருப்தி கிளப்பும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்த பின்னரே, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முடியும் என திமுக நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு காட்டமான மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டணியின் ஒழுக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே திமுகவின் வாதமாக உள்ளது. இதனால், வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago