தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் சினிமாக்கு வந்தது எப்படி? என்று அவரது தாயார் மேகலா சித்திரைவேல் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் சிஷ்யனான வெற்றிமாறன், கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அவரது தாயார் மேகலா சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, வெற்றிமாறன் வந்து ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினார். அவர் பெயர் ஆர்த்தி, நல்ல பெண், உங்களைப் போலவே இருப்பார் என்றார். உடனே நான், “அந்தப் பெண்ணை அழைத்து வா” என்று கூறினேன். அதேபோல் வெற்றிமாறனும் அழைத்து வந்து நிலையில், குடும்பத்தினரும் சம்மதித்தனர். ஆனால் நான் பெண்ணின் வீட்டில் ஒப்புக் கொண்டால் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியிருந்தேன்.
இந்நிலையில் ஆர்த்தியின் அப்பா, அம்மா வீட்டுக்கு வந்து பேசினார்கள். இருப்பினும் அவர்களுக்கு சிறிது தயக்கம் இருந்தது, பின் இயக்குனர் பாலு மகேந்திரா வந்து இதுபோல, ஒரு பையன் கிடைக்காது நம்பி பொண்ணு குடுங்க என்று கூறியதும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வெற்றிமாறன் தாலி கட்ட மாட்டேன் என்று மறுத்த நிலையில், அவரது தாயார் கூறியதால் தாலி கட்ட ஒப்புக்கொண்டார். மேலும் தனது தாய் கையிலே தாலியை வாங்கி, ஆர்த்திக்கு கட்டினார் என தெரியவந்தது. தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…