5 வயது சிறுமியின் அந்தரங்கை உறுப்பை வெட்டி… கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை… 2024-இல் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி அதுல் நிஹாலேவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த செப்டம்பர் 24, 2024 அன்று ஷாஜகானாபாத் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், தனது பாட்டி வீட்டின் முன்னே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 15 நிமிடங்களில் அழைத்து வருவதாகக் கூறி கூட்டிச் சென்ற அதுல் நிஹாலே, அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை கத்தியால் துண்டித்து  படுகொலை செய்துள்ளார்.

சிறுமியைக் காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அதுல் நிஹாலேவின் வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தை வைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவரது தாயும் சகோதரியும் எலி செத்துவிட்டதாகக் கூறி போலீசாரைத் தடுக்க முயன்றனர். ஆனால், சந்தேகமடைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் சிறுமியின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தற்போது இதனை எதிர்த்து அவர் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

அதுல் நிஹாலே, அவரது தாயார் பசந்தி பாய் மற்றும் சகோதரி சஞ்சல் ஆகியோரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. விசாரணையின் போது, அந்தச் சிறுமியின் உடைகள் மற்றும் கொலையாவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தான் செய்த குற்றத்தை அதுல் நிஹாலே ஒப்புக்கொண்டதோடு, சிறுமியின் சடலத்தை மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் தனது தாயும் சகோதரியும் முழுமையாக உதவியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த போபால் விசாரணை நீதிமன்றம், குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு அதுல் நிஹாலேவுக்கு மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு கொடூரமான குற்றத்தை மறைக்கத் துணையாக இருந்ததற்காகவும், போலீசாரை திசைதிருப்ப முயன்றதற்காகவும் அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 மணத்தியாலங்கள் ago