Categories: சினிமா

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவை நெகிழ்ச்சி அடைய வைத்த மலேஷிய சிறுமி… இணையத்தை கலக்கும் வீடியோ…!

Spread the love

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது கொள்ளை கொள்ளும் அழகால் ரசிகர்களை கட்டி இழுத்தார்.

இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. தற்பொழுது இவர் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுள்ளார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இந்த ஜோடி திடீரென இருவரும் பெற்றோர் ஆகி விட்டோம் என்று திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது. தற்பொழுது இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாராவை மலேஷிய சிறுமி ஒருவர் சந்தித்துள்ளார். அவரின் தீவிர ரசிகையான இந்த சிறுமியை சந்தித்த நடிகை நயன்தாரா சிறுமியை கட்டிப்பிடித்து கொஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

அண்ணன் வலது கரம் யார்?…. பனையூரில் வெடித்த உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…. மாஜிக்களுக்குப் பின் புதிய கட்சியில் வெடிக்கும் பனிப்போர்….!

தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.…

3 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் தேர்தல்…. அரசு சிறப்பு ஏற்பாடு…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை…

7 minutes ago

“ஷோரூமில் இருந்து வெளியே வந்த புதிய கார்…” பைக் மீது பாய்ந்து விபத்து… ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பயங்கரம்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டம் சாகரா நகரில், ஆயுத பூஜை அன்று ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று பூஜைக்குப்…

11 minutes ago

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. முதல்வர் விஜய் மாஸ் ஆக்ஷன்….!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னையில் 10…

12 minutes ago

கடவுளே இப்படியா ஆகணும்…? மருத்துவக் கல்லூரி விடுதியில் எம்பிபிஎஸ் மாணவி சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? கதறும் குடும்பத்தினர்… பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பெய்கராஜ் பூர் மருத்துவக் கல்லூரியின் விடுதி அறையில் 24 வயது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவி…

25 minutes ago

விஜய் ரூட்டில் தனுஷ்…. ஆனால் அஜித் தான் அந்த சூப்பர் ஸ்டார்?…. ஜோதிடர் பிரசாந்த் கினி ஷாக் கணிப்பு…. அதிரும் அரசியல் களம்….!

தமிழக அரசியலில் நடிகர்களின் தொடர் வருகையும், பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினியின் தற்போதைய கணிப்புகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.…

25 minutes ago