இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சடிக்கும் பிரிவான ‘பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்’, இந்தியாவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக, சர்வதேச அளவில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாலிமர் தாள்களை வழங்கிட தகுதியுள்ள உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கி வரவேற்றுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இந்தியாவில் வழக்கமாகப் புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகளுக்குப் பதிலாக முற்றிலும் பிளாஸ்டிக் கரன்சிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். முன்னதாக கடந்த 2014-15 ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் பத்து ரூபாய் பிளாஸ்டிக் தாள்களைச் சோதனை முறையில் புழக்கத்தில் விட ஆர்பிஐ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், இந்தத் டெண்டரில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசிடமிருந்து உரிய பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த நோட்டுகளுக்கான மூலப்பொருட்கள் சீனா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது என்றும், இந்தியாவுக்காகத் தயாரிக்கப்படும் இந்த பிரத்யேகப் பொருட்களை வேறு எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் விற்கக் கூடாது என்றும் ஆர்பிஐ திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வழக்கமான தாள்களை விட 3 மடங்கு அதிக உழைப்பு, அழுக்கு மற்றும் கிருமிகள் ஒட்டாமை, கள்ள நோட்டுகளை உருவாக்குவது மிகக் கடினம் மற்றும் சேதமடைந்த தாள்களை முழுமையாக மறுசுழற்சி செய்யும் வசதி போன்ற பல நன்மைகள் இந்த பிளாஸ்டிக் நோட்டுகளில் நிறைந்துள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…