காலையிலேயே இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி… கூண்டோடு திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி.. செந்தில் பாலாஜியின் ஆட்டம் ஆரம்பம்…!

Spread the love

கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்துள்ளார். அமைச்சர் வி. செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கரூர் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் தடம் பதிக்க திமுக தீவிரம் காட்டி வரும் வேளையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் களத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

கட்சி மாறியதுடன் நில்லாமல், அடுத்த சில நாட்களில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வலுவான பதிலடி கொடுக்கும் வகையில் பிரம்மாண்ட இணைவு விழா ஒன்றையும் நடத்த MDA துரைமுருகன் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர்கள் பலரை திமுகவில் இணைக்கப் போவதாக அவர் சவால் விடுத்துள்ளார். தற்போது கொங்கு மண்டலம் முழுவதும் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், கட்சித் தாவல்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நகர்வுகள் வரவிருக்கும் தேர்தல்களில் கரூர் மாவட்டத்தின் அரசியல் செல்வாக்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“தெரு தெருவா மண்டவெல்லம் வித்தாரு”… எடப்பாடிக்கு வேலை போட்டுக் கொடுத்ததே நான் தான்… மேடையில் உண்மையை உடைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்…!

மதுரை ஆனையூர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும்…

2 minutes ago

“ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி”…. அதிமுகவின் ‘பிக் அனவுன்ஸ்மென்ட்’… பிப்ரவரி 24-ல் வெளியாகப்போகும் ‘மெகா’ லிஸ்ட்….!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்…

7 minutes ago

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம்… தனுஷ் நடிப்பில் உருவாகுமா? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…

7 minutes ago

விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்தெரியுமா ..? த்ரிஷாவை இழுத்து பி.டி. செல்வகுமார் கிளப்பிய புதுப் புயல்..!!

விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார்,  தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள  விமர்சனம் பெரும்…

10 minutes ago

இன்று தப்பு செய்கிறவர் தான் ரசிகர்களுக்கு ஹீரோவாக தெரிகிறார் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் சரத்குமார்!

மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…

10 minutes ago