விதி செய்த சதி: படுத்த படுக்கையாக வந்து காதலிக்கு தாலி கட்டிய காதலன் – வைரலாகும் உருக்கமான திருமண வீடியோ..!

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தன்று மணமகன் அங்கித் தனது தம்பி சர்வ்ஜீத்துடன் இருசக்கர வாகனத்தில் சலூனுக்குச் சென்றபோது, பள்ளிப் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் அங்கித்தின் தம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கித் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தம்பியின் மரணத்தால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், இரு குடும்பத்தினரும் பேசித் திருமணத்தை அதே நாளில் நடத்த முடிவு செய்தனர். கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அங்கித், அமரவோ அல்லது நிற்கவோ முடியாத நிலையில் இருந்தார். இதனால், அவர் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வாகனத்தில் படுத்த நிலையிலேயே மணமகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வீட்டு முற்றத்தில் திருமண மண்டபம் தயாராக இருந்தும், மணமகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணம் அவர் படுத்திருந்த காரின் உள்ளேயே நடைபெற்றது. வைதீக மந்திரங்கள் முழங்க, காரில் படுத்தபடியே அங்கித் மணமகள் பிரமீளாவிற்கு தாலி கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்தார். ஒரு பக்கம் தம்பியை இழந்த துக்கம், மறுபக்கம் காயங்களுடன் நடந்த திருமணம் என அந்த இடமே கண்ணீரில் நனைந்திருந்தது.

Swetha

Recent Posts

இனி லேட் பண்ண முடியாது..! சிலிண்டர் டெலிவரியில் தாமதம் செய்தால் ஆப்பு – அதிரடி காட்டும் அரசு…!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…

1 minute ago

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

4 minutes ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

10 minutes ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

11 minutes ago

CSK-வுக்கு வர சஞ்சு போட்ட கண்டிஷன் இதுதானா?… பாட்காஸ்ட்டில் உண்மையை உடைத்த ‘சேப்பாக்கம்’ சாம்சன்…!

சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…

27 minutes ago

BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…

32 minutes ago