தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகளான மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இறந்த தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி சோசியல் மீடியாவில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’ என குறிப்பிட்டுட்டிருந்தார்.இந்த பதிவானது அனைவரது மனதையும் கலங்கடித்தது.
சமீபத்தில் விரைவில் வெளியாக உள்ள தனது ரத்தம் படம் புரமோஷனுக்கு நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகளுடன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழ் படம், தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ரத்தம் திரைப்படம் மலேசியாவில் இன்று திரையிடப்படுவதாகவும், அவரே அங்கு சென்று நேரடியாக ப்ரோமோஷன் செய்ய இருந்ததாகவும், சூழ்நிலையின் காரணமாக வரமுடியாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்படத்தில் தான் crime journalistஆக நடித்துள்ளதாக கூறிய அவர் குடும்பமாக சென்று பாருங்கள் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…