இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலில் பரேக் 2025-26 நிதியாண்டில் 2.5 சதவீத உயர்வுடன் மொத்தம் 82.6 கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார். இதில் அவரது நிலையான அடிப்படைச் சம்பளம் 8.5 கோடி ரூபாயாகவும், செயல்திறன் அடிப்படையிலான Variable Pay 23.35 கோடி ரூபாயாகவும், நிறுவனப் பங்குகளை பணமாக மாற்றியதன் மூலம் கிடைத்த தொகை 50.75 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்நிறுவனம் தனது 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த காலக்கெடுவை அறிவிக்காமல் மௌனம் காக்கும் வேளையில், சிஇஓ-வின் இந்த மெகா சம்பள விவரம் ஐடி ஊழியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடாந்திர அறிக்கையின்படி, சலில் பரேக்கின் ஒட்டுமொத்த ஊதியம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு சராசரி ஊழியரின் நடுத்தர ஊதியத்தை (Median Employee Remuneration) விட சுமார் 742 மடங்கு அதிகமாகும்; பங்குகள் மூலமான லாபத்தைத் தவிர்த்தாலும் கூட இது 289 மடங்கு அதிகமாகவே நீடிக்கிறது. சலில் பரேக்கின் இந்த 82.6 கோடி ரூபாய் வருமானத்தை நாட்களின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், அவர் ஒரு நாளுக்கு 22.63 லட்சம் ரூபாயும், ஒரு நிமிடத்திற்கு 1,571 ரூபாயும் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிற முன்னணி ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில், டிசிஎஸ் அமைப்பின் சிஇஓ கே.கிருதிவாசன் ஆண்டுக்கு 28 கோடி ரூபாயும், விப்ரோ நிறுவன சிஇஓ ஸ்ரீநிவாஸ் பல்லியா 53.6 கோடி ரூபாயும் பெறுகின்றனர். இவர்களை விட மிக உச்சமாக, எச்சிஎல் டெக் (HCLTech) நிறுவனத்தின் சிஇஓ சி. விஜயகுமார் 94.6 கோடி ரூபாய் சம்பளம் பெற்று ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் நீடிக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…