டுவிஸ்ட்… விஜய் அமைச்சரவையில் சிபிஐ இணைகிறதா…? திருமாவளவன் கொடுத்த க்ரீன் சிக்னல்… சூடேறும் தமிழக அரசியல்…!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் தற்போது சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஏற்கனவே அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை இதுவரை தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இந்தச் சூழலில், சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், முதல்வர் விஜய் அமைச்சரவையில் தங்களது கட்சி இடம்பெறுவதற்கான சூழல் வரும் என்றும், ஓசூர் மண்ணில் இருந்து கூட கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவதற்கான காலம் நெருங்குகிறது என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரபாண்டியனின் இந்த அதிரடியான கருத்து குறித்து அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக அமைச்சரவையில் இடம்பெறும் படியான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழு மனதாக வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டணி ஆட்சியில் மற்றொரு தோழமை கட்சியான சிபிஐ அமைச்சரவைக்கு வந்தாலும் தங்களுக்கு சம்மதமே என்ற நோக்கில் திருமாவளவன் அளித்துள்ள இந்தப் பதில், தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் திட்டவட்டமான விளக்கத்தை அளித்துள்ளார். தவெக அமைச்சரவையில் பங்கேற்பது இல்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களும் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், வீரபாண்டியனின் இந்த மாறுபட்ட கருத்து குறித்து அவரிடமே விளக்கம் கேட்கப்படும் என்று சண்முகம் கூறியுள்ளார். மேலும், சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரை தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது இல்லை என்ற கொள்கை முடிவில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமைச்சரவை பங்கீட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் எழுந்துள்ள இந்த முரண்பட்ட கருத்துகளால், தமிழ்நாடு அரசியலில் வரும் நாட்களில் பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

12 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

20 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

26 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

33 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

46 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

51 minutes ago