20 லட்சம் பேர் இணையும் ‘வி தி லீடர்ஸ்’…. அண்ணாமலையின் புதிய அவதாரம்….. பொள்ளாச்சியில் இன்று அரங்கேறும் மாபெரும் அரசியல் திருப்பம்….!

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பிறகு தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதலாவது விழிப்புணர்வு மாநாடு இன்று பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. கடந்த 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக அதிரடி அரசியல் நடத்திக் கவனம் ஈர்த்த அண்ணாமலை, அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துத் தனது விலகல் முடிவை அறிவித்தார். புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான முதற்கட்டமாக இந்த அமைப்பை அவர் நிறுவியுள்ள நிலையில், குறுகிய காலத்திற்குள்ளேயே இதில் சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து தமிழக அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டுள்ளன. ‘போதையில்லா பொள்ளாச்சி’ என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை மையமாக வைத்து நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்காகக் குடிநீர், தற்காலிகக் கழிப்பறைகள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்னும் இந்த அமைப்பிற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் சூழலில், இந்த மாநாடு அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்விற்கான ஒரு முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவிலிருந்து விலகிய பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அண்ணாமலை நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்தார். சமீபத்தில் கரூரில் நிலப் பட்டா மாற்றம் தொடர்பாக தவெக அரசு எடுத்த முடிவிற்கு அவர் வரவேற்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று மாலை நடைபெறவிருக்கும் மாநாட்டின் மேடையில் அண்ணாமலை தனது எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்தும், புதிய கட்சி தொடங்குவது குறித்தும் என்ன பேசப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

25 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

39 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

46 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

53 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

1 மணத்தியாலம் ago