Categories: சினிமா

“ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லி டா”…. ரீ – ரிலீசில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் விஜய். இந்த பேரும், புகழும் ஒரே நாளிலோ, அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என அனைத்தையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் விஜய்.

விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கில்லி. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம். நடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை பல விதங்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் காட்டியிருப்பார்.

இப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் ‘ஒப்பு டு’ என்ற தலைப்பில் வெளியாகிய சக்க போடு போட்டது. தமிழில் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.  இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ் அவர்கள் “செல்லம் I Love you” என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

சமீபத்தில் இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்  ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். தற்பொழுது இதற்கான முன்பதிவுகளும் தொடங்கி விட்டதாம். இதுகுறித்து ரோகிணி திரையரங்க உரிமையாளர் கூறியிருப்பதாவது, அதாவது கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தாண்டின் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட படமாக கில்லி திரைப்படம் அமைந்துள்ளதாம்.  எனவே இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் காண ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்துக் கொண்டிருப்பதை நாம் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago