நடிகை விசித்ரா, இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் கேரளாவில் நடந்த படப்பிடிப்பின் போது நைட் ரூமுக்கு வந்துடு என அழைத்தார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்ற தகவல், சில தினங்களாக வைரலாகி வருகிறது. இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து இன்னும் சில பரபரப்பான தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் பாலகிருஷ்ணா, என்டி ராமாராவ் மகன் என்பதால், ரவுடித்தனமான மனிதர் என ஆரம்பத்திலேயே பெயர் வாங்கியவர்.
இவரது ரசிகர் மன்ற தலைவராக இருந்த சுரேஷ் என்பவரை தனது புரடியூசர் ஆக்கி, தன்னுடனே வைத்துக்கொண்டார் பாலகிருஷ்ணா. குடும்பத்தில் ஒருவர் போல அவர் இருந்தார். தமிழில் விக்ரம் நடித்த சாமி படத்தில் தெலுங்கில் ரீமேக் செய்து, விக்ரம் நடித்த கேரக்டரில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். அது 250 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா முடிந்த பின், வீட்டில் தனியறையில் புரடியூசர் சிவாவும், பாலகிருஷ்ணாவும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் பதறிப் போய் அந்த அறைக்குள் சென்று பார்த்த போது, பாலகிருஷ்ணா, புரடியூசர் சுரேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டார் என் தெரிந்தது. உடனடியாக சுரேஷை மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றி விட்டனர்.
அப்போதைய முதல்வர் ராஜசேகரன் ரெட்டி, தெலுங்கு தேசம் சார்ந்த பாலகிருஷ்ணாவை கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்பதால், உடனடியாக அவரது குடும்பத்தினர் ஒரு ஐடியா செய்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் பாலகிருஷ்ணாவை சேர்த்து, அவர் நீண்ட நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்
என செட்டப் செய்து போலி மருத்துவ சான்றிதழ் வாங்கிக்கொண்டு, போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பாலகிருஷ்ணாவை தப்பிக்க வைத்தவர். இதை போலீசார் உள்பட பலரும் நம்பாத நிலையில், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தை நாகேந்திர பிரசாத், இந்த பிரச்னையில் தலையிட்டு, சுடப்பட்டவர் சாகவில்லை என்பதால், சுமூகமாக பேசி முடித்திருக்கிறார். இப்படி பல விஷயங்களில் பாலகிருஷ்ணா தனது வில்லத்தனத்தை காட்டியவர்தான் என்கிறார் செய்யாறு பாலு.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…