“பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்…” விடைத்தாள் முதல் ஆசிரியர்கள் வரை… அரசு வெளியிட்ட புது ரூல்ஸ்…!!

Spread the love

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் சில முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான விடைத்தாள்களில், மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முகப்புத்தாள் சரியாகத் தைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேர்வுக்கு முன்னரே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், கூடுதல் விடைத்தாள்களைப் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக நியமிக்கப்படும் ‘ஸ்கிரைப்’ (Scribe) பணியில், அந்தந்தப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் பணியமர்த்தக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 11-ல் தொடங்கிய இந்தப் பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க இந்த அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் முறையான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

22 minutes ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

34 minutes ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

41 minutes ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

54 minutes ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

1 மணத்தியாலம் ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

1 மணத்தியாலம் ago