மனைவியுடன் 50 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த அந்த முதியவர், அவர் மறைந்த பிறகு இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் தன் அறையில் தனிமையில் சோகமாக அமர்ந்திருந்தார். அந்த நினைவுகளின் பாரம் அவரை மௌனத்தில் ஆழ்த்தியிருந்தது. அப்போது அங்கு வந்த அவரது மருமகள், “ஏன் மாமா இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்?” என்று வாஞ்சையுடன் கேட்டார். அதற்கு அவர், “இன்று உன் மாமியாரின் நினைவு நாள், அவளுடைய நினைவுகள் இன்று என்னை மிகவும் வாட்டுகின்றன” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
மருமகள் அவரிடம், “மாமா, இப்போதும் நீங்கள் அவரை அவ்வளவு மிஸ் செய்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர் கண்கலங்கியபடி, “ஆமாம், இப்போதும் அவள் என் கனவில் வருகிறாள். நான் சரியாக இருக்கிறேனா, உடம்பைப் பார்த்துக் கொள்கிறேனா என்று அக்கறையுடன் அறிவுரை சொல்கிறாள். அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு அவளுடைய அருமை புரிகிறது” என்று உணர்ச்சிவசப்பட்டார். 50 ஆண்டுகால பந்தம் பிரிந்தாலும், அந்த அன்பு இன்னும் குறையாமல் இருப்பதை அவர் வார்த்தைகள் உணர்த்தின.
மருமகள் அவரைத் தேற்றும் விதமாக, “மாமா, நாங்கள் எல்லாரும் உங்களுடன் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறினார். அதற்கு அவர், “நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பது எனக்குப் பெரிய ஆறுதல் தான், ஆனாலும் அவளுடைய அந்த ஒரு இடத்தைத் யாராலும் நிரப்ப முடியாது” என்றார். உடனே அந்த மருமகள் அன்புடன், “மாமா, நீங்கள் இன்று சோகமாக இருக்க வேண்டாம். இன்று மாலை நீங்கள் இருவரும் அடிக்கடி சென்று ஆசை ஆசையாய் ஐஸ்கிரீம் சாப்பிடுவீர்களே, அதே இடத்திற்கு நாம் அனைவரும் சேர்ந்து செல்வோம்” என்று கூறி அவரை நெகிழச் செய்தார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…