மேத்யூ பெர்ரி மரண வழக்கு…திடீரென வாக்குமூலத்தை மாற்றிய ஜாஸ்வீன… போதை ராணிக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. அதிர்ச்சியில் ஹாலிவுட் …!!

Spread the love

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரணம் தொடர்பான போதைப்பொருள் விநியோக வழக்கில், ‘கெட்டமைன் ராணி’ என்று அழைக்கப்படும் ஜாஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் மேத்யூ பெர்ரி தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு ரத்தத்தில் இருந்த அதிகப்படியான ‘கெட்டமைன்’ போதைப்பொருளே காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் உறுதியானது. மனநலப் பிரச்சினைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்தை, மேத்யூவுக்குத் தவறான முறையில் வழங்கி அவரை அடிமையாக்கிய கும்பல் தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் 42 வயதான ஜாஸ்வீன் சங்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஹாலிவுட் பிரபலங்களுக்குத் தொடர்ந்து போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளார். மேத்யூவின் உதவியாளர் மற்றும் இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கிய ஜாஸ்வீன், வெறும் 12 டாலர் மதிப்புள்ள ஒரு குப்பி கெட்டமைனை மேத்யூவிடம் 1000 டாலர்களுக்கு விற்றுப் பணம் பறித்துள்ளார். இவரது குடியிருப்பில் இருந்து 79 பாட்டில்கள் திரவ கெட்டமைன், கோகைன் மற்றும் மெத் மாத்திரைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேத்யூ பெர்ரியின் மரணத்திற்குப் பிறகும் ஜாஸ்வீன் சங்கா எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி தனது போதைப்பொருள் விற்பனையைத் தொடர்ந்து வந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஜாஸ்வீன், பின்னர் ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டார். மேத்யூவின் மரணத்திற்கு நேரடியாகக் காரணமாக இருந்த விநியோகம் மற்றும் சட்டவிரோத விற்பனை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இந்த 15 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஜாஸ்வீனுடன் தொடர்புடைய பிற குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கெட்டமைன் வழங்கிய டாக்டர் சால்வடார் பிளாசென்சியாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு மருத்துவரான மார்க் சாவேஸுக்கு எட்டு மாதங்கள் வீட்டுக் காவலும் விதிக்கப்பட்டுள்ளது. மேத்யூ பெர்ரியின் உதவியாளரும் இவ்வழக்கில் கைதாகியுள்ளார். ஹாலிவுட் நட்சத்திரத்தை ஏமாற்றி போதைப்பொருள் வழங்கி உயிரிழக்கச் செய்த இந்தக் கும்பலின் செயல் உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

7 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

10 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

10 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

11 மணத்தியாலங்கள் ago