பாஜக-வையே ஓவர்டேக் செய்த ‘கரப்பான் பூச்சி பார்ட்டி’.. எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட்ட மர்மம்.. பகீர் பின்னணி…!!!

Spread the love

சமூக ஊடகங்களில் இயங்கும் சில இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே அபிஜித் திப்கே என்பவர் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (கரப்பான் பூச்சி மக்கள் கட்சி) என்ற பெயரில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கினார். பின்னர் நீதிபதி சூர்ய காந்த், தான் போலியான பட்டப் படிப்புகளைப் பெற்றவர்களைக் குறித்தே அவ்வாறு பேசியதாக விளக்கம் அளித்திருந்தாலும், அதற்குள் இந்த அமைப்பு நெட்டிசன்களிடையே அசுர வேகத்தில் பரவத் தொடங்கிவிட்டது.

இந்தியாவின் முன்னணி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றை விடவும், இந்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிகக் குறுகிய காலத்தில் 2 கோடிக்கும் அதிகமான Gen Z இளைஞர்கள் பின்தொடரத் தொடங்கினர். சமகாலச் சமூகப் பிரச்சினைகள் மற்றும் இளைஞர்களின் குரலாக இந்த அமைப்பு உருவெடுத்ததால், ஒட்டுமொத்த இந்திய நெட்டிசன்களின் பேராதரவைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாக இது குறுகிய காலத்தில் உருவெடுத்தது.

இளைஞர்களின் பலத்த ஆதரவோடு இயங்கி வந்த இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் திடீரென முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது 2 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட இவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது இணையவாசிகள் மத்தியில் தற்போது மீண்டும் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“பதவியும் போச்சு… பாசமும் போச்சு”… எடப்பாடியிடம் சரணடைந்த வேலுமணி டீம்… ‘நோ’ சொன்ன இபிஎஸ்… பின்னணியில் இருக்கும் ‘லீமா ரோஸ்’…!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து…

1 minute ago

தைரியம் இருந்தா உதயசூரியனை விடுத்து.. தனிச்சு நின்னு ஜெயித்துக் காட்டுங்க..!ஜவாஹிருல்லாவுக்கு திமுகவினர் விடுத்த அதிரடி சவால்…!

தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…

6 minutes ago

“ஒரு மாசத்துக்கு போன் பண்ணாதீங்க!” – அமித் ஷாவிடம் கெஞ்சிய அதிமுக பிரமுகர்… பின்னணியில் நடந்த பரபரப்பு டீலிங்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்னும் அமைதியடையாத நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள…

9 minutes ago

விஜய்யின் ‘5 சால்வை’ ரகசியம்: அதிமுகவை அசைத்துப் பார்த்த தவெக-வின் மாஸ்டர் பிளான்… மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள்…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அரசியல் அதிரடிகள்…

14 minutes ago

கோவை சிறுமி கொலை வழக்கில்.. சிரித்து கொண்டே பதில் அளித்தாரா அமைச்சர் கீர்த்தனா..? இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன..?

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

21 minutes ago