தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தவிர, காங்கிரஸ் (28 இடங்கள்), திமுக (164 இடங்கள்), விசிக (8 இடங்கள்) மற்றும் மதிமுக உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடனான இடப்பகிர்வு சுமுகமாக முடிந்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில், வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, இம்முறை அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன், 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். கள நிலவரங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பையும் உறுதி செய்ய கடந்த நான்கு நாட்களாக அவர் உறக்கமின்றி இந்தப் பட்டியலைச் செதுக்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “கடைசியாக வந்தாலும் லேட்டஸ்டாக வரும்” என அவர் குறிப்பிட்டது போலவே, எதிரணிகளை அதிரவைக்கும் ஒரு ‘பாகுபலி’ வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…