திமுக vs தவெக விவாதம்…! “யார் அப்பா காசு?”… செங்கோட்டையனைத் திணறடித்த கே.என்.நேருவின் ஒற்றைக் கேள்வி… சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு…!!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார்கள் வழங்கும் திட்டம் குறித்து காரசாரமான விவாதம் அரங்கேறியது. இந்தத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு விலையுயர்ந்த சொந்தக் கார்களைப் பயன்படுத்தினாலும், அரசு அளிக்கும் வாகனத்தில் செல்வது தனி கவுரவத்தைத் தரும் என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த காலத்தில் கார் பந்தயத்தை நடத்துவதற்காக 24 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்தவர்கள், தற்போது அரசு வழங்கும் கார் திட்டத்தைக் குறை கூறுவது ஏன் எனத் தீவிரமாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு வழங்கும் கார் தேவையில்லை என்பது தங்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு என்றும், விருப்பமுள்ள மற்ற உறுப்பினர்கள் அதனைப் பெற்றுக் கொள்வதில் தங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை என்றும் விளக்கமளித்தார். கார் பந்தயத்தைப் பொறுத்தவரை, பல சட்டச் சிக்கல்களைத் தாண்டி ஆசியாவிலேயே முதல்முறையாக இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வு அது என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த நிகழ்வைக் கொச்சைப்படுத்துவது ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களையும் அவமதிப்பதற்குச் சமம் என்று வாதிட்டார்.

இதன்பிறகும் அமைச்சர் செங்கோட்டையன் கார் பந்தயத்திற்காகச் செலவிடப்பட்ட 24 கோடி ரூபாய் யாருடைய பணம் என மீண்டும் விமர்சிக்கவே, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு வெகுண்டெழுந்து பதிலளித்தார். கார் ரேஸ் என்பதும் மற்ற சர்வதேச விளையாட்டுகளைப் போன்ற ஒரு போட்டிதான் என்று கூறிய அவர், முன்பு செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 10 கோடி ரூபாய் நிதியில் போட்டிகளை நடத்திவிட்டு வீரர்களுக்குப் பதக்கம் கூட அளிக்காமல் விட்டதை நினைவூட்டினார். அப்போது செலவிடப்பட்ட தொகை மட்டும் யாருடைய பணம் என நேரு எழுப்பிய இந்த அதிரடியான கேள்வியைக் கேட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புன்னகைத்துவிட்டார்.

Gayathri

Recent Posts

“இனி எல்லாமே எடப்பாடி தான்”…. திடீர் யு-டர்ன் அடித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்… அதிர்ச்சியில் வேலுமணி, சி.வி.சண்முகம்….!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும், தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்…

4 minutes ago

இதுதான் First Look-ஆ?… மீண்டும் தடையா?… ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வசமாகச் சிக்கிய தவெக அரசு… அதிமுகவின் பகீர் குற்றச்சாட்டு…!!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விமர்சிக்கும் வகையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ…

4 minutes ago

“அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்… ஆனா”…. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் வெளிப்படுத்திய சீக்ரெட்….!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், மூத்த நடிகருமான சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தளபதி விஜய் நடித்த 'காதலுக்கு…

10 minutes ago

கையில் கத்தியுடன் நின்ற சைக்கோ இளைஞன்… தாயைக் கொன்ற மகன் அடுத்தடுத்து செய்த வெறிச்செயல்… காவல்துறைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த நாரகம்விளையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிஜி. கடந்த 2021-ஆம் ஆண்டு பெற்ற தாயையே…

10 minutes ago

“அதிகாரிகளுக்கே தெரியாது!”… திடீரென புழல் சிறைக்குள் நுழைந்த CM விஜய்… அதிர்ந்துபோன அதிகாரிகள்… சிறைத்துறைக்கு அதிரடி உத்தரவு…!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து முன்னறிவிப்பின்றி பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய், அதன் தொடர்ச்சியாகச் சென்னை…

18 minutes ago

உதயநிதி அப்செட்… மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு…. அறிவாலயத்தில் வெடித்த திடீர் மோதல்…?

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் உட்கட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

20 minutes ago